Breaking

Thursday, March 28, 2019

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களால் வழங்கிவைப்பு



-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்க சிட்னி கிளையுடன் மற்றைய  கிளைகளும் இணைந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை 27.03.2019 வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 31 பாடசாலைகளுக்கு இவ் விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உடற்கல்வி துறையின் உதவிப் பணிப்பாளர் எஸ். சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்க சிட்னி கிளையின் தலைவர் சுப்பிரமணியம் சுபதாசன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள்,  உடற்கல்வி ஆலோசகர், ஆசிரியர்கள் மாணவர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.
















No comments:

Post a Comment