Breaking

Wednesday, March 27, 2019

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்.


வாழைச்சேனை நிருபர் தர்ஷன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பத்தரமுல்லையில் உள்ள சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்

குறித்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம்.ஏ.எம். நிஜாம்இ மாநில மகளிர் லீக் பொருளாளர் ஷாஸ்மினாஸ்இ திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோருடன் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் திருமதி அசோகா அலவத்த இ சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் வஹாப்தீன் இ முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சமன் உடவத்த ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





No comments:

Post a Comment