Breaking

Thursday, March 28, 2019

ஏறாவூர் - நீராவி இயந்திரம் வெடித்ததில் தொழிலாளி பலி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரிசி ஆலையொன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அந்த அரிசி ஆலையின் நீராவி இயந்திரம் (ஸ்டீமர்) தற்செயலாக வெடித்ததில் காயமடைந்து மரணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் - ஹிஸ்புல்லாஹ்நகர், மையவாடி வீதியை அண்டி வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான முஹம்மத் பாறூக் (வயது 55) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் வியாழக்கிழமை 28.03.2019 மரணித்துள்ளார்.

இவர் கடந்த புதன்கிழமை 20ஆம் திகதி  சம்மாந்துறையிலுள்ள அரிசி ஆலையொன்றில் வேலை செய்து கொண்டிருந்த சமயம் அங்குள்ள நீராவி இயந்திரம் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வதை;தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் வியாழக்கிழமை காலை மரணமடைந்ததா உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment