Breaking

Monday, April 1, 2019

இலகுவில் பாதிக்கப்படக் கூடிய வகுப்பாரை வலுவூட்டினால் நாட்டின் பாதிப்பங்கு அபிவிருத்தி இயல்பாக அடையப்பட்டு விடும் - பிரிட்டிஷ் கவுன்சில் சமூக ஆய்வு வளவியலாளர் பிரியங்கா



(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தரப்பினரான பெண்கள், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள்,  சமத்துவம் அளிக்கப்படாதோர் ஆகியோரை வலுவூட்டினால் நாட்டின் பாதிப்பங்கு அபிவிருத்தி இயல்பாகவே அடையப்பட்டு விடும் என பிரிட்டிஷ் கவுன்சிலின்  சமூக ஆய்வாளரும் வளவியலாளருமான ஜெயராஜ் பிரியங்கா தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சில், சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம், (ஆரளடiஅ யுனை) தொழிற் பயிற்சி அதிகாரசபை (ஏழஉயவழையெட வுசயiniபெ யுரவாழசவைல) ஆகியவை இணைந்து நடாத்தும் செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டம் 'யுஉவiஎந ஊவைணைநளெ வுசயiniபெ Pசழபசயஅஅந''  திங்கட்கிழமை 01.04.2019 வந்தாறுமூலை தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் 'செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தின்' நோக்கம் பற்றி வளவாளர் பிரியங்கா தெளிவுபடுத்தினார்.

அங்கு அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், உலக சனத்தொகை ஒழுங்கமைப்பில் பாதிப்பங்கிற்கு மேல் பெண்கள் உள்ளார்கள், இலங்கையிலும் அவ்வாறுதான். கிராமங்களிலும் பெண்களே பாதிப்பங்கிற்கு மேல் உள்ளார்கள்.

அதேபோல் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய சமூகத்தினராக சிறுவர்களும், மாற்றுத்திறனாளிகளும், இன்னும் சமத்துவம் கிடைக்கப்பெறாதோரும் உள்ளார்கள்.

எனவே, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைக்கும்போதும் நாட்டின் சனத்தொகையில் பாதிப்பங்கிற்கும் மேலுள்ள இத்தகைய தரப்பாரைக் கரிசனை கொண்டு கவனத்தில் எடுத்து செயற்திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினாரல் நாட்டிக் பாதிப்பங்கிற்கும் மேற்பட்ட அபிவிருத்தி இயல்பாகவே அடையப்பெற்று விடும்.

எல்லாத் தரப்பாரையும் கவனத்தில் எடுத்து அவர்களையும் உட்படுத்தி, வலுவூட்டி, அமுலாக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களாலேயே தங்குதிறனான அபிவிருத்தியும் சமூக ஒற்றுமையும் ஏற்படும்.

இந்தத் திட்டத்தின் நீண்ட கால மறைமுகப் பயன்களாக சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையில் சகவாழ்வு போன்றவையும் இணைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயத்தில், அடுத்து வரப்போகின்ற மனித வளங்களான இளைஞர் யுவதிகள் சிரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய பயிற்சி நெறியும் செயற் திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.' என்றார்.

இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள்  பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் கள ஆய்வுகளில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமுலாக்கப்படக் கூடிய பரீட்சார்த்த திட்டங்களை சமூகங்களுடன் இணைந்து வடிவமைக்க உள்ளனர்.

இதற்கான அனுசரணைகளில் பிரிட்டிஷ் கவுன்சில் (டீசவைiளா ஊழரnஉடை) சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம், (ஆரளடiஅ யுனை) தொழிற் பயிற்சி அதிகாரசபை (ஏழஉயவழையெட வுசயiniபெ யுரவாழசவைல) ஆகியவை இணைந்து கொண்டுள்ளன.

இந்நிகழ்வில், சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷ்மி, தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் போதனாசிரியர் எஸ். விஜயராஜா உட்பட பயிலுநர்களான இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.















No comments:

Post a Comment