Breaking

Monday, April 1, 2019

இவ்வாண்டு முடிவடைவதற்குள் நைற்றா மூலமாக சுமார் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட் உறுதி


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இவ்வாண்டு முடிவடைவதற்குள் நைற்றா மூலமாக சுமார் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA - National Apprentice and Industrial Training Authority)புதிய தலைவர் செய்னுரலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை கூட்டமைப்பு (Federation of Information Technology Industries of  Sri lanka) (FITIS) என்ற தனியார் நிறுவனமும் நைற்றாவும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் டிஜிட்டல் பயிற்சியில் சர்வதேச தகுதியுள்ள சான்றிதழை பெறுவதற்கான கூட்டு பயிற்சிமுறைமை ஜசிடிரி    ஒன்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு திங்களன்று 01.04.2019 நைற்றா தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் குஐவுஐளு நிறுவனத் தலைவர் கலாநிதி கீர்த்சிறி மஞ்சநாயக்க உட்பட இந்நிறுவனத்தின் முக்கியஸ்தர்களும், நைற்றா நிறுவனத் தலைவர் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்த நைற்றா தலைவர் மேலும் கூறியதாவது,

இந்த தொழிற்துறையில் 2020 ஆம் ஆண்டிற்;குள் 2 லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளபோதும் அத்தொழிற் துறைக்கு நிபுணதர்துவ தகைமை பெற்ற 80 ஆயிரம் பேரே உள்ளனர்.

இன்னும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கான தேவையுள்ளது என்பதை கருத்திற் கொண்டே இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த வாரங்களில் தனியார்துறைகளில் பயிற்சிசார் தொழில்துறை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாகத் தனியார் வைத்தியசாலைகளில் தாதிமார்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கில் பயிற்சிகள் மூலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கார்கிள்ஸ் நிறுவனத்துடனும் பேச்சு நடைபெற்றது.

இதேபோன்று வெளிநாடுகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் மேலதிக கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மற்றொரு முயற்சியாகவே டிஜி;ட்டல் தகவல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'என்றார்.

No comments:

Post a Comment