(வரதன் , விஜயரெத்தினம்)
ஜெனிவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது இதனைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீடித்து நிலைத்திருக்கும் அரசியல் தீர்வு விரைவாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிர் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் கடந்தகால அரசாங்கம் போன்று அமைச்சர்கள் சிலர் எங்களுக்கு தெரியாமல் இங்கு வந்து செல்லு கின்றனர். அமைச்சு பதவிகள் எடுக்கவில்லை என்பதற்காக எங்களை புறக்கனிக்க முடியாது தமிழ் பகுதி மக்களின் அபிவிருத்தி பணிகள் எங்களினூடகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கமும் படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறினால் தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக அமையும் உண்மை நிலை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். யுத்த சூழலில் கிழக்கு மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது ஆனால் வருகின்ற வெளிநாட்டு தூதுவர்களும் வட மாகாணம் நோக்கிச் செல்கிறார்கள். இது கிழக்கு மாகாணம் என நினைத்திருக்கிறீர்களா அல்லது கிளக்கிஸ்தான் என நினைத்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. கிழக்கு மாகாணத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


No comments:
Post a Comment