-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வைத்தியசாலைகள் யாவும் இன மத பேதமற்று சேவையாற்றுகின்ற புனிதமான இடங்கள் இவற்றை அரசியல் களங்களாக மாற்றிவிட வேண்டாம் என்று உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு தான் உருக்கமான வேண்டுகோளை விடுப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 26.03.2019 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு ஆறுதலும் அரவணைப்பும் அளித்து அவர்களை மீட்டெடுக்கின்ற புனிதமான இடங்களாக வைத்தியசாலைகள் உள்ளன.
இந்த மகோன்னத சேவைக்குரிய இடத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை அமுல்படுத்துகின்ற ஒரு தளமாக வைத்தியசாலைகளபை; பயன்படுத்த உள்ளுர் அரசியலல்வாதிகள் முனைவது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக உள்ளது.
குறிப்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அரசியல்வாதிகளின் ஆகிகிரமிப்புக்குரிய இடமாக மாறிவிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்த வைத்தியசாலை ஏறாவூர் முஸ்லிம் நகரில் அமைந்திருந்த போதிலும் இங்கு இன மத பேதமற்று தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக மக்கள் கணிசமான அளவு உள் நோயாளர்களாகவும் வெளி நோயாளர்களாகவும் சிகிச்சை பெற்றுப் பயனடைகின்றார்கள்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக அதிகளவு எண்ணிக்கையில் நாளாந்தம் நுமார் 700 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுப் பயனடைகிறார்கள் என்று பதிவுகள் உள்ளன.
பல்வேறு வசதிக் குறைபாடுகள் வைத்திய மற்றும் ஆளணியினரின் பற்றாக்குறைகள் இருந்தபோதிலும் கைசம் உள்ள பௌதீக ஆளணி வசதிகளை வைத்துக் கொண்டு முடிந்தளவுக்கு இங்கு வைத்திய சேவை இடம்பெறுகின்றது.
சரித்திர பூர்வமான இந்த வைத்தியசாலை இன ஐக்கியத்திற்குரிய ஒரு தளமாகவும் காலாகாலமாக இருந்து வந்துள்ளது.
மாவட்ட வைத்தியசாலையாக இருந்த ஏறாவூர்ஃ வைத்தியசாலையை நான் எனது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பதவிக் காலத்தில் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தினேன்.
எனவே, அரசியல்வாதிகள் எவர் அதிகாரத்தில் இருந்தபோதிலும் அவர்கள் மூலமாக இந்த வைத்தியசாலையின் சேவைகளை முன்னேற்றமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சுகாதாரத்துறையினருக்கும் நோயளிகளுக்கும் இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் எந்தவொரு அரசியல்வாதியும் தம்மாலான அபிவிருத்திகளை இந்த வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வருவதோடு மற்ற அரசியல்வாதிகள் கொண்டு வரும் அபிவிருத்திகளையும் வரவேற்கும் சிறந்த கனவான் அரசியல் சம்பிரதாயத்தைக் கற்றுக் கொள்ள ணே;டும்.
அதனை விடுத்து தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்து மற்ற அரசியல்வாதிகளைத் தூற்றிப் பேசி கிடைக்கக் கூடிய அபிவிருத்திகளைத் தடை செய்யும் அற்ப அரசியல் போக்கை எவரும் கைக் கொள்ளக் கூடாது.' என்றார்.


No comments:
Post a Comment