வரதன்
மட்டக்களப்பு ஜெயந்தீபுரம் பௌத்த மத்திய நிலையத்தில் முருகன் பிள்ளையாருக்கான இந்து ஆலயத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரையின் விகாராதிபதி பெட்டபொல குணநந்த ஹிமியின் தலைமையில் நடைபெற்றது. இன நல்லிணக்கத்தினை எடுத்தக்காட்டும் வகையில் இந்து ஆலயம் ஒன்று அமைத்துத் தருமாறு விகாரைத்தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான ஆஞ்சநேயர் நிறுவன பணிப்பாளர் சண்முகராஜாவின் நிதியளிப்பில் இந்த ஆலயம் அமைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெகதீஸ்வர சர்மா தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்துக்கான அடிக்கல் நடைபெற்றது.இந் நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மட்டக்களப்பு- பௌத்த விகாரையொன்றில் முதல் முறையாக இந்து ஆலயம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிட த்தக்கதாகும். இவ் இந்து ஆலயத்தின் அமைப்புக்கான அனைத்துச் செலவுகளையும் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான ஆஞ்சநேயர்- சண்முகராஜா வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment