Breaking

Wednesday, March 20, 2019

ஊடகத்துறைப் பட்டப்படிப்பை ஆரம்பிக்க இணக்கம்


எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில், ஊடகத்துறைப் பட்டப்படிப்பு கற்கைநெறியை ஆரம்பிக்க, சவுதி அரேபியாவின் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கல்லூரியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஊடகத்துறையில் பட்டதாரிகளை உருவாக்கும் வகையில், கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில், ஊடக கற்கைநெறியை ஆரம்பிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை, கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment