-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
ஏறாவூர் நகரில் தீவிரவாத எதிர்ப்புக்கான மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு பொது அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களும் பங்குபற்றிப் பயன்பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் நகரில் இரவோடிரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் மேற்படி பொதுக் கூட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தீவிரவாத எதிர்ப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் 'போதையால் ஏற்படும் அழிவு, தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்க்கும் இஸ்லாம், எது நேர்வழி' போன்ற அம்சங்களில் சிறப்புச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment