ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் நாள் தமிழ்,சிங்கள புதுவருடதினமென்பதாலும் அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ஆதலாலும் மறுநாள் திங்கட்கிழமை மேலும் ஒருநாள் விடுமுறை தினத்தை அறிவித்து புத்தாண்டை குதூகலத்துடன் கொண்டாட வழிசெய்துள்ளது அரசாங்கம்.


No comments:
Post a Comment