வரதன்
கடந்தகாலங்களில் இடம் பெற்ற யுத்தநிலைமைகளின் போது முன்னெடுக்க வேண்டிய மணித உரிமை பொறுப்புகூறல் விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க மணித உரிமைப்பேரவை கேட்டு கொண்டுள்ளது.அதற்கு ஜநா 2 வருடகால அவகாசம் கொடுத்திருந்தது ஆனால் இம்முறையும் காலஅவகாசம் கேட்கின்றனர். கால அவகாசம் கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரில்லை.சர்வதேசம் சில பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்கின்ற நடைமுறைகள் உள்ளன. அது அவர்களது நிகழ்ச்சி நிரலாகும் ஆனால் சர்வதேசம் கொடுக்கின்ற கால அவகாசத்தை சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் கொடுக்கின்றதென சிலர் பேலித்தனமான சில்லறை பிரச்சாரம் செய்து எமக்கு கெட்ட பெயரை வாங்கிதர நினைக்கின்றார்கள்.
படுமேசமாக மணித உரிமையை மீறியவர்களை கதாநாயகர் போல் வைத்து கொண்டும் மணித உரிமைகளை பாதுகாக்க நினைக்கு எம்மை குற்றவாளிகளாகவும் காண்பிற்பதற்கு ஓரு ஊடகம் பகிரந்க பிரயத்தன் செய்து கொண்டு வருகின்றது.நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் செல்லி கடந்த காலத்தில் அரசியல் சதிநடந்தபோது சம்பந்தப்பட்டவர்களை அந்த ஊடகம் புகழ்ந்து தள்ளியது. ஆனால் மணித உரிமைகள் மீறப்பட்ட போதும் காணமல் ஆக்கப்பட்ட விடயத்தை கண்டு கொள்ளமல் ஆளுகின்றவர்களை பயன் படுத்தி அவர்கள் சுகபேகங்களை அனுபவிக்க நினைக்கி ன்றார்கள். தப்பானவர்களை பற்றி கதைப்பதில் பிரயேசனமில்லை.நாய் வாளை ஒரபோதும் நிமித்த முடியாது.கெட்ட வழியில் பேகின்ற வர்களை நாம் மாற்ற முடியாதென மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


No comments:
Post a Comment