(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஸூஹைர் எம்.எச்.ஸைட் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சனிக்கிழமை மாலை 30.03.2019 காத்தான்குடிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
காத்தான்குடி அலுவலகத்திற்கு வருகை தந்த தூதுவருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பலஸ்தீனத் தூதர் கிழக்கு மாணகாண ஆளுநருடன் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கும் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இதன்போது ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் தூதுவர் ஸூஹைருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.










No comments:
Post a Comment