Breaking

Sunday, March 31, 2019

மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடம் அடிக்கல்


( வாழைச்சேனை நிருபர் தர்சன் )
மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள்தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.ஜிப்ரிகரீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைதீன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.அமீர், எம்.ஜௌபர், எஸ்.ஜெஸ்மின், எஸ்.பாயிஸா, சட்டத்தரணி எஸ்.ராசிக், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலீல் றகுமான் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஒரு கோடி எழுபத்தைந்து இலட்சம் ரூபா நிதியில் பத்து வகுப்பறைகளை கொண்டதாக இரு மாடிக் கட்டடம் அமையப்பெறவுள்ளது.

பாடசாலை நிருவாகம் மற்றும் பிரதேச மக்களால் கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீன், விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.




















No comments:

Post a Comment