இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய இணைப்பு விஞ்ஞாபனம் ஒன்றை கட்சியின் இணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் கே.பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், இந்திய மத்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் மக்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக உரிய அந்தஸ்த்தை வழங்குவதுடன், அதிகாரப் பகிர்வை துரிதமாக்கவும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.


No comments:
Post a Comment