Breaking

Saturday, March 23, 2019

மட்டக்களப்புக்கு வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைத்தார்.


(க. விஜயரெத்தினம்)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய விழா காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்புக்கு   சனிக்கிழமை(23) விஜயம் செய்யத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்இ காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை 10.30 மணியளவில்  நடைபெற்ற  இந்த வைபவத்தில்இ காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கஇ இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானாஇஎம்.எஸ்.எஸ்.அமீரலிஇ கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்இகாணி மறு சீரமைப்பு பிரதியமைச்சர் எட்வேட் குணசேகரஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்இசீ.யோகேஸ்வரன்இ கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபகுணவர்த்தனஇகிழக்கு மாகாண காணி ஆணையாளர்இதிணைக்களத் தலைவர்கள்இஅமைச்சின் செயலாளர்கள்இஉட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

மாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில்  6109 காணி அனுமதிப்பத்திரங்களும்இ 1097 காணி உறுதிப்பத்திரங்களும் (அளிப்பு) வழங்கப்பட்டுள்ளது.


















No comments:

Post a Comment