Breaking

Thursday, March 21, 2019

மட்டக்களப்பு அரச ஆசிரியர் கலாசாலையின் 72வது சான்றிதழ் வழங்கும் விழா



வா.கிருஸ்ணகுமார்

மட்டக்களப்பு அரச ஆசிரியர் கலாசாலையின் 72வது சான்றிதழ் வழங்கும் விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கலாசாலையின் அதிபர் வி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.நவநீதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கல்வி அமைச்சின் தேசிய கல்வியில் கல்லூரி பிரிவுகளுக்கான பணிப்பாளர் புஸ்பகுமார ஹகலே,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் வி.மயில்வாகனம்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வர் கே.புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயிற்சியை நிறைவுசெய்த ஆசிரியர்கள் மற்றும் அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து விபுலானந்தர் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு அரச ஆசிரியர் கலாசாலையில் 2016,2017 கல்வியாண்டில் பயிற்சியை நிறைவுசெய்த ஆசிரியர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்டமாக சான்றிதல்கள் வழங்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு துறைகளையும்சேர்ந்த சுமார் 408 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


























No comments:

Post a Comment