Breaking

Thursday, March 21, 2019

புளியந்தீவு 05ம், 06ம் வட்டார இறைமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திருச்சிலுவைப்பாதை வழிபாடு.


-வாழைச்சேனை நிருபர் தர்சன்-

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் 05ம் 06ம் வட்டார இறைமக்களால் தவக்கால விசேட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட திருச்சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் விசேட திருப்பலி நிகழ்வு இன்றைய தினம் புளியந்தீவு 03ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ரிதம் இளைஞர் கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது செபவழிபாடு, திருச்சிலுவைப்பாதை சுற்றுப் பிரார்த்தனை மற்றும் விசேட திருப்பலிப் பூசை என்பன இடம்பெற்றன. இவ் வழிபாட்டில் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை ரி.வி. அன்னதாசன் அவர்களினால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டாரப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது







No comments:

Post a Comment